தொழிலின்போது மரணமடைந்த கடற்றொழிலாளர்கள் விபரங்கள் திரட்டப்படுகிறது

விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி இம்மாதம் 24ஆம் திகதி
தொழிலின் போது கடலில் மரணமடைந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விபரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டிவருகிறது.
வடமாகாண சபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கடலில் தொழிற் செய்யும்போது மரணம் அடைந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவுதொகையாக ரூபா ஒரு இலட்சம் ரூபா வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே. கடலில் இறக்க நேர்ந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்படுகிறது.
கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் விண்ணப்பப் படிவங்களை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து பெற்றுப் பூர்த்திசெய்து மரணச்சான்றிதழுடன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களினூடாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளயாளரிடம் கையளிக்கவேண்டும். இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி இம் மாதம் 24ஆம் திகதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனையில் இருந்து தவறி வீழ்ந்து இறந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு இலட்சம் ரூபாவை வடமாகாண கூட்டுறவு அமைச்சு வழங்கி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. Tamil_Daily_News_83806574345

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com