சற்று முன்
Home / செய்திகள் / தொழிலாளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் முத்து சிவலிங்கம் !

தொழிலாளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் முத்து சிவலிங்கம் !

இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் நீக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் பொறுப்பை மருதபாண்டி ரமேஷ்வரன் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுக்கூடல் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரியான சீ.எல்.எப்வில் 16.02.2018 அன்று காலை இடம்பெற்றது.

காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடப்பட்ட தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயல்பட்ட வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்கள் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதேவேளை அவருக்கு காங்கிரஸின் போசகராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிதி காரியதரிசியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரனுக்கு வழங்க நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இந்த பதவியை வழங்கியுள்ளது.

காங்கிரஸின் பொது செயலாளராக இருந்த என்னை எதிர்வரும் காலங்களில் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகிக்க வேண்டும் என நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஊடாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பொறுப்புகளை வழங்கியதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் சந்திப்பு ஒன்றை ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 16.02.2018 அன்று நடத்தினார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், உப தலைவர் கணேசமூர்த்தி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகள் 11யை கூட்டு இணைவோடு கைப்பற்றிக்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் விபரித்தோம். அத்தோடு எதிர்காலத்தில் நிதிகள் ஒதுக்கப்படுவதன் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம் என்றார்.

மேலும், மிக நீண்ட நாட்களாக பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என ஜனாதிபதியின் ஊடாக வழியுறுத்தப்பட்டு இருந்து. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.

இவருடன் இணைந்த பிறகு நாம் பதவிகளை பெற்றுக்கொள்வோம் என எண்ணியிருந்தோம். அதேவேளை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இவருடன் இணைந்து பாரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டதனால் எமக்கு கிடைத்த இந்த பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டோம் என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com