தொழிலாளர் தினத்தினை கேப்பாபுலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டமாக முன்னெடுக்க முடிவு!

இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 61 வது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாளைய தினம் சர்வதேச தொழிலாளர்தினம் தொழிலாளர்களின் உரிமைவேண்டி போராடும் நாளில் நாம் தொழில் புரியும் இடங்களை இழந்தநிலையில் வாழ்கின்றோம்.எனவே எமது சொந்தக் காணிகளை வயல் நிலங்களை கடல்வளத்தை அபகரித்து இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையில், எமது தொழில் வாய்ப்புக்களை இழந்து இன்று ஏழரை வருடமாக கஸ்ரப்பட்டு வருவதோடு இன்றுடன் 61ஆவது நாளாக வீதிவாழ்கையை வாழ்கின்றோம்.

இதற்கு தீர்வு வேண்டி தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் நாளான நாளை எமது தொழில் உபகரணங்களோடு 138 குடும்பமும் வீதியில் ஒப்பாரி போராட்டமொன்றை நிகழ்த்தி எமது உரிமைகளை கோரவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com