சற்று முன்
Home / செய்திகள் / தொண்டைமானாறு கடல்நீரேரியின் வான்கதவுகளும் திறப்பு

தொண்டைமானாறு கடல்நீரேரியின் வான்கதவுகளும் திறப்பு

அதிக நீர் வரத்து காரணமாக யாழ் தொண்டைமனாறு – வல்லை கடல் நீரேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்றும் இன்றும் பதிவான கடும் மழை வீழ்ச்சி காரணமாக தொண்டைமனாறு நீரேரியின் நீர்மட்டம் 3.8 அங்குலம் உயர்ந்துள்ளது. இதனால் இன்றையதினம் இந்த நீரேரியின் மூன்று வான்கதவுகள் யாழ்ப்பாண மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் திறந்து விடப்பட்டது.

இதனை அண்மித்த அக்கரை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடு வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தொண்டைமனாறு நீரேரியில் குளிப்பதற்கும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வல்லை நீரேரியின் அருகிலுள்ள தாழ்நில மக்கள் மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பிற்கு இலக்காகி வருகின்றனர். அச்சுவேலி, தொண்டமனாறு மற்றும் வடமராட்சி கிழக்கின் பல கிராமங்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்கின்றது.

தற்போது பெய்யும் கனமழையையடுத்து நீரேரியின் கொள்ளளவு சடுதியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே அச்சுவேலி- தொண்டமானாறு பிரதான வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், அச்சுவேலி கிராமங்கள் சில நீரில் மூழ்கின. தற்போதைய கன மழையால் வடமராட்சி கிழக்கின் பல கிராமங்கள் நீரில் மூழ்கின.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com