சற்று முன்
Home / செய்திகள் / தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

நிரந்தர நியமனத்திற்கான திகதியை தெரிவிக்குமாறு கோரி வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

வடமாகாணத்தினைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் (28) காலை முதல் தொடர்ச்சியான உணவுதவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், வடமாகாண ஆளுநர் அலுவலத்தினையும் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த பல காலங்களாக தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கக் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், வடமாகாண ஆளுநரின் செயலாளரினால் அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக நிரந்தர நியமனத்திற்கான அறிவுறுத்தல்கள் வடமாகாண ஆளுநருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாக வாக்குறுதிகளை அளித்திருந்ததாக கூறப்படுகின்றது.

ஆனாலும், இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில், தமக்கான நிரந்தர நியமனத்திற்கான திகதியை வழங்குமாறு வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.மேலும் இந்த ஆண்டு நிறைவு பெறும் நிலையில் இருப்பதனால், இந்த ஓரிரு தினங்களுக்கும் தமக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கான திகதியை அறிவிக்குமாறும், எந்த இடையூறுகள், கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், பின்வாங்கப் போவதில்லை என கூறி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் இடையில் முரண்பாடு தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலத்தின் மூன்று கதவினையும் பூட்டி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தின் போது ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனுக்கும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் இடையில் சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டதையடுத்து அவர் யாழப்பாணம் பொலிசாருக்கு  பொலிஸாரிடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவித்து அலுவலகத்தின் உள்ளே சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வடமாகாண ஆளுநர் அலுவலத்திற்கு வந்துள்ளனர்.

அத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொண்டர் ஆசிரியர்களிடம் பொலிஸார் அலுவலகத்தின் கதவினை மூட முடியாது. நீங்கள் உங்களின் உண்ணாவிரதத்தினை முன்னெடுக்க முடியுமென கூறியதுடன், தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்கள்.

மேலும் 30 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன் 2 மணித்தியாலயங்கள் அவகாசம் தருவதாக உரிய தரப்பினருடன் பேசி பதில் தருமாறு கூறி கதவினை திறந்து விட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com