தொடர்ந்து அச்சுறுத்தப்படும் அருட்தந்தை !!

மனிதவுரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ரஜன், மற்றும் நினைவு கற்களை செதுக்கிய சிற்பி இருவரும் விசாரணைக்காக நாளை மறுதினமும் 22ம் திகதி முல்லைத்தீவு காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 17 ஆம் திகதி முல்லைத்தீவு காவல்துறையினரால் இவர்கள் இருவரும் 2 மணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.அதன் பின்னர் 19 ஆம் திகதி மீளவும் வவுனியாவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். தற்போது 3 ஆவது தடவையாக இருவரும் முல்லைதீவு காவல்துறைக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் நினைவு தூபி ஒன்றினை அமைத்துவிடக்கூடாதென்பதில் இலங்கை அரசு தெளிவாக உள்ளது. வடமாகாணசபை பெயரளவில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதும் அது எந்தவொரு நினைவு சின்னத்தையும் நிறுவத்தயாராக இல்லை. அரசுடன் இது தொடர்பில் திரைமறைவு கையாளுதல்கள் நடந்ததாக சொல்லப்படுகின்றது.

இதேவேளை சிவில் சமூக இளைப் பேச்சாளராகவும் மனிதவுரிமை செயற்பாட்டாளராகவும் இருக்கின்ற அருட்தந்தை எழில்ரஜனிற்கு எதிரகா நல்லாட்சியால் பின்னப்படும் சதிவலை குறித்து சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகங்கள் குரல்கொடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

One comment

  1. HR.activist Fr.Elilrajan shd send emails to embssies UNHCR,AI,CBK,NPC,Opp.leader soon!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com