சற்று முன்
Home / செய்திகள் / தொடரும் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை – இன்றும் பன்னிரண்டு பேர் கைது

தொடரும் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை – இன்றும் பன்னிரண்டு பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வந்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் தெற்கு கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கடற்பாதுகாப்பு திணைக்களத்தினர் இவர்களைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த மீனவர்கள் வசமிருந்த இரண்டு படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களாகும்.

இதேவேளை, தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com