தைப்பொங்கல் விழா எது அரசியல் விழா எது என்பது தெரியாத சிலர் அதைக் குழப்ப முயல்கிறார்கள் – மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன்

தைப்பொங்கல் விழா எது அரசியல் விழா எது என்பது தெரியாத சிலர் அதைக் குழப்ப முயல்கிறார்கள் தலவாக்கலையில் மிக நீண்ட காலமாக கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறவில்லை என்பதை அறிந்து பொங்கல் விழாவை நடத்தினோம்.

இதற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானின் ஆதரவு முழுமையாக கிடைத்தது ஆகையால் தலவாக்கலையில் இவ்விழாவையொட்டி கொண்டாடுகின்றோம் என மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா தலவாக்கலை நகரில் 15.01.2017 அன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

இதை கூட நடத்தவிடாமல் சிலர் பாடசாலை மாணவர்களை வைத்துக் அரசியல் விழா நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

தைப்பொங்கல் விழா எது அரசியல் விழா எது என்பது தெரியாதவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். கலாச்சார விழுமியங்களை பாதுகாப்பது நமது கடமை பாடசாலை மாணவர்கள் இவ்வாறான விழுமியங்களை காப்பாற்ற வந்தவர்கள். இம்மாணவர்களின் கலை உணர்வுகளையும் வெளிக்கொணர வேண்டும்.

அவர்களும் கலாச்சாரங்களை பேணி பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஊக்குவிப்பாளர்களாக நாம் இருக்க வேண்டும்.

இன்றைய நிகழ்வுக்கு நாம் வாகனங்கள் கொடுத்து ஆட்கள் வரவழைக்க வில்லை. எமது மீது பற்று உள்ளவர்கள் அன்பாகவே இணைந்து கொண்டனர்.

கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் பொது மக்கள் என கலந்து கொண்டமைக்கு இ.தோ.காவின் சேவையும் ஒரு காரணமாகவும். அத்தோடு ஆறுமுகம் தொண்டமானின் மக்கள் கொண்டுள்ள பற்றும் முக்கிய காரணமாகவும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com