தைப்பொங்கலை புறக்கணித்து, விடுதலைக்கு அழுத்தம் கொடுங்கள். – அரசியல் கைதிகள் கோரிக்கை.

தைப்பொங்கல் பண்டிகையை புறக்கணித்து தமது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு உள்ள 21 தமிழ் அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டனர்.
அதன் போது தமிழர்களின் பாரம்பரிய தைப்பொங்கல் பண்டிகையை புறக்கணித்து தமது விடுதலைக்கு அழுத்தம் கொடுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை இம்முறை யாழில் தேசிய பொங்கல் விழாவினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds