தேர்தல் சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது

(30.07.2015) அச்சுவேலி தோப்புப் பகுதியில் புதன்கிழமை (29) இரவு தேர்தல் சுவரொட்டி ஒட்டிய இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கட்சி ஒன்றுக்கு ஆதரவான தேர்தல் பிரசார சுவரொட்டி ஒட்டியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இரவு ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார், இவர்களைக் கைது செய்ததுடன், இவர்களிடமிருந்து ஒரு தொகுதி சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com