தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்கு புதிய கட்டடம்

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளை கவனத்திற் கொண்டு, யாழ். மாவட்ட தேர்தல் காரியாலயத்திற்காக 18,425 சதுர அடியில் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 97.7 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com