சற்று முன்
Home / செய்திகள் / தேர்தலை புறக்கணிக்காதீர்கள்.

தேர்தலை புறக்கணிக்காதீர்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும் எனவும் எவரும் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என்றும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

வாக்களிப்பது என்பது நமது தலையாய கடமையாகும். வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும்.

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலைநேரம் வரை காலம் தாழ்த்தாது நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com