சற்று முன்
Home / செய்திகள் / தேர்தலுக்குத் தயாராகுங்கள் – தேர்தல் ஆணைக்குழு தலைவர் பணிப்பு

தேர்தலுக்குத் தயாராகுங்கள் – தேர்தல் ஆணைக்குழு தலைவர் பணிப்பு


எந்தத் தேர்தலையும் எந்த நேரத்திலும் நடத்துவதற்கான முன்னாயுத்தங்களில் ஈடுபடுமாறு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்
எவரும் எந்த விடயம் சார்பிலும் எவருக்கும் வாய் திறக்க வேண்டாம் எனவும் உதவித் தேர்தல் ஆணையாளர்களிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

25 மாவட்டங்களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சந்தித்து 2018ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் பூர்த்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார் . இதன் இறுதியில் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரித்தார்.

இங்கே குறித்த விடயம் தொடர்பில் மேலும் விபரம் தெரிவிக்கையில் யாரும் , யாருக்கும் , எது தொடர்பில் கருத்துரைத்தாலும் அது மறுதரப்புடன் தர்க்கமாக அமையும் எனவே அதனை தவிர்க்க வேண்டும். அதேநேரம் அனைத்து உதவித் தேர்தல் ஆணையாளர்களும் எந்த தேர்தலையும் , எந்த நேரத்திலும் நடாத்துவதற்கு தயாராக இருக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com