தேர்தலில் வென்றால் இளைஞர்களிற்கு பணம் வழங்குவேன் – மகிந்த ராஜபக்ஷ

(26.07.2015) தாம் தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வந்தால்,  18 வயது முதல் 30 வரையான இளைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபா பணம் கொடுக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறிய இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கையா என்ற கோணத்தில் ஆராயப்பட்டுவருவதாக கொழும்புத் தவகல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மஹிந்த இதனை தெரிவித்திருந்தார்.
அத்துடன், இளைஞர்களுக்கு வெளிநாடு செல்ல கடன் மற்றும் 6000 ரூபா வரை மஹபொல புலமைப்பரிசில் தொகையை பெற்றுக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
தாம் பதவிக்கு வந்தவுடன் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாக, ஏற்கனவே மஹிந்த தமது தேர்தல் பிரசார கூட்டமொன்றில் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், கடந்த வருடம் இறுதியாக சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கோ இளைஞர் யுவதிகளுக்கோ எவ்வித வரப்பிரசாதங்களையும் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com