சற்று முன்
Home / இந்தியா / தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதி பட்டதாரியா இருக்கவேண்டும் – அதிரடி காட்டும் கமலின் மக்கள் நீதி மையம்

தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதி பட்டதாரியா இருக்கவேண்டும் – அதிரடி காட்டும் கமலின் மக்கள் நீதி மையம்

21 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார்.

சென்னை ஜி.ஆர்.டி. கிராண்ட் நட்சத்திர விடுதியில், இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்துக்கு கமல்ஹாசன் வரும்போதே, ‘வருங்கால முதல்வர் நம்மவர்’ என்கிற கோஷம் அதிர்ந்தது. ம.நீ.மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர் அருணாசலத்தைத் தவிர, மற்ற எவரும் வேட்டி அணியாமல், பேன்ட் ஷர்ட் அணிந்திருந்தது, இளைஞர்களிடம் வித்தியாச உணர்வைத் தந்தது. மேடை ஏறிய கமல், 21 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிடுவதாகவும், மீதியுள்ள தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலுக்குமான வேட்பாளர் பட்டியலை வரும் மார்ச் 24-ம் தேதி கோவையில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர், வேட்பாளர் லிஸ்ட்டை அறிவித்தவர், கமீலா நாசர், மௌரியா உள்ளிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இதற்கிடையே, மக்கள் நீதி மய்யத்தின் முதல் வேட்பாளர் பட்டியலில் 3 மருத்துவர்கள், 5 வழக்கறிஞர்கள், ஒரு முன்னாள் காவல் துறை ஐஜி, ஒரு முன்னாள் நீதிபதி இடம்பிடித்துள்ளனர். எட்டு பேர் வணிகர்களாக உள்ளனர். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 பேரில், 15-க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருமே குறைந்தது ஒரு பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதில், மூன்று பேர் எம்.ஃபில் பட்டதாரிகள்.

முன்னதாக, “வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே?” என்கிற கேள்விக்கு, “மீதமிருக்கும் வேட்பாளர் பட்டியலும் வெளிவரும்போது, உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்” என்று கமலஹாசன் கூறினார். ஒரு பூத்துக்கு 9 பேர் வீதம், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 4500 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்தனர். மார்ச் 24-ம் தேதி வெளியிடப்போகும் தேர்தல் வாக்குறுதிகளோடு, தொகுதியின் பிரத்யேக பிரச்னைகளையும் மையமாக வைத்து பிரசாரம் செய்யுமாறு கமல் உத்தரவிட்டுள்ளாராம். இம்மாதக் கடைசியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com