சற்று முன்
Home / செய்திகள் / தேர்தலில் குதிக்கிறார் `குப்பை ராணி’…

தேர்தலில் குதிக்கிறார் `குப்பை ராணி’…

இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளராக அஜந்தா பெரேரா என்பவர் களமிறங்குகிறார்.

உலகில் வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன்னரே, இலங்கை யில் 1931-ம் ஆண்டே ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை மக்கள் தொகை யில் 52 சதவீதம் பெண்கள் இருந் தாலும் உள்ளாட்சி சபைகளில் 1.9 சதவீதம், மாகாண சபைகளில் 4 சதவீதம், நாடாளுமன்றத்தில் 5.3 சதவீதம்தான் பெண்கள் பதவிகளில் உள்ளனர்.

இந்த நிலையை நீக்கக் கோரி, இலங்கையில் மகளிர் உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததன் விளைவாக, 2017-ல் உள்ளாட்சி தேர்தல் சட் டத்திலும், மாகாண சபை தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு, பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப் பட்டது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக் கீடு அதிகரிக்கப்பட உள்ளது. உலகிலேயே முதல் பெண் பிரத மராக மாவோ பண்டாரநாயக 1960-ம் ஆண்டில் இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோன்று அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக குமார துங்க இலங்கையின் முதல் ஜனாதிபதி 1994-ம் ஆண்டு தேர்ந் தெடுக்கப்பட்டார்.

இலங்கையில் முதன்முதலாக அதிபர் பதவி 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முதல் பெண் வேட்பாள ராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக போட்டியிட்டார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக குமார துங்க இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை அதிபர் தேர்தலில் பெண்கள் யாரும் போட்டியிடாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், டிசம்பர் 7-ல் இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடை பெறும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா சமீபத் தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்சிகள் தமது அதிபர் வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜ பக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, மக்கள் விடுதலை முன்ன ணியின் (ஜேவிபி) அதிபர் வேட் பாளராக அநுர குமார திஸாநாயக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வின் ஐக்கிய தேசியக் கட்சி யும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இதுவரையிலும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வில்லை.

இந்நிலையில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா என்ற பெண், ஜனாதிபதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அஜந்தா பெரேரா பள்ளிக் கல்வியை சென்னை குட்ஷெப்பர்டு பள்ளியிலும், ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவும், தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து தமிழர்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்கவும் தாம் தயாராக உள்ளதாக அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குப்பை சேகரிப்பாளர்களுடன் அவர் பணியாற்றி வருவதனால், குப்பை ராணி என அவர் அழைக்கப்படுகின்றார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com