சற்று முன்
Home / செய்திகள் / தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து அமைச்சராவேன் – செல்வம் அடைக்கலநாதன்

தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து அமைச்சராவேன் – செல்வம் அடைக்கலநாதன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவின் மணியர்குளத்தில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தேர்தல் காலத்தில் மட்டும் நீங்கள் எட்டிப்பார்த்துவிட்டு இப்போது நான் கேட்டவற்றில் எந்த உதவியினை வழங்கப்போகின்றீர்களனெ கேள்வி எழுப்பிய வேளையிலேயே தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு தெற்கில் ஆட்சிபீடமேறும் தரப்புக்களுடன் கூட்டு சேர்ந்து அமைச்சரவையில் பங்கெடுக்கும். நானும் நிச்சயம் அமைச்சராவேனென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

முன்னைய ஆட்சி மாற்றத்தின் போது சுமந்திரனிற்கு மைத்திரி-ரணில் அமைச்சு பதவியினை வழங்குவது பற்றி பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com