தேனீர் சூடாக இல்லை – சூடான சாரதியும் நடத்துனரும் உணவக உரிமையாளரை கடத்திச் சென்று தாக்குதல்

உணவகத்தில் ஏற்பட்ட பிணக்கினையடுத்து மறுநாள் தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும், வவுனியாவைச் சேர்ந்த உணவக உரிமையாளரான இளைஞரை தாக்கி, கடத்திச் சென்றதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மூலம் தெரியவருவதாவது,

வவுனியா நகர பேருந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற 26 வயது இளைஞன் நடத்தி வரும் உணவகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (20) சென்ற வவுனியா கொழும்பு வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட சிலர் தேநீர் கேட்டுள்ளனர்.

அங்கு வழங்கப்பட்ட தேநீர் சூடாக இல்லை என குறித்த இளைஞனுடன் வாய்த் தர்க்கப்பட்டு சென்ற அவர்கள், மறுநாள் இரவு 10.30 மணியளவில் உணவகத்தில் தனியாக நின்ற குறித்த இளைஞனை, பேச வருமாறு குறித்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் சமரசம் செய்வதற்காக அழைப்பதாக நினைத்து சென்ற இளைஞன் மீது, அங்கிருந்த சிலர் இரும்புக்கம்பியால் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளதுடன் இளைஞனை தமது பேருந்தில் தூக்கி போட்டு மதவாச்சி நோக்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் கச்சான் விற்பனையில் ஈடுபடும் ஒருவர் குறித்த உணவகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து கடையில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது, குறித்த தனியார் பேருந்து, உள் மின்விளக்கை அணைத்துவிட்டு மதவாச்சி நோக்கி செல்வதை அவதானித்ததுள்ளனர்.

இவ்வாறு குறித்த நபர்கள் பின்தொடர்வதை அவதானித்த, தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் குறித்த இளைஞனை ஈரப்பெரியகுளம் பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞனை மீட்கப்பட்டதோடு, உறவினர்கள் இளைஞனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

(படம் – நன்றி தினகரன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com