தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி வரவில்லை – பாதுகாப்பு காரணம் என தகவல் !

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்வதான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதிவரை ஜனாதிபதியின் வருகை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை.

யுத்த சூழல் ஒன்றினை உணரும் வகையிலான இராணுவ வீதி ரோந்து நடவடிக்கைகள் மறியல்கள் இருபது அடி தூரத்திற்கு வீதியின் இருமருங்கும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் படைவீரர்கள் அவர்களிற்கு இடையில் பொலிசார் என வியாழக்கிழமை முதல் பலாலி வீதி படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. 

 இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சூழல் காரணமாக ஜனாதிபதியின் பயணம் இடைநிறுத்தப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீரசிங்க மண்டபத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
எனினும் பாதுகாப்புக் காரணங்களின் பொருட்டே ஜனாதிபதி தேசிய பொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds