தேசிய இன­மான தமி­ழர்கள் தமது உரி­மை­களை கேட்­ப­தனை இன­வா­த­மாக பார்க்க முடி­யாது

Suresh-Premachandranசிறு­பான்மை தேசிய இன­மான தமி­ழர்கள், தமக்­கான உரி­மைகளை கேட்­ப­தனை இன­வா­த­மாகப் பார்க்க முடி­யாது எனத் தெரி­வித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், எழுக தமிழ் பேர­ணியில் தமி­ழர்கள் தமது பிரச்­சி­னைகள் தொடர்­பா­கவே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்­களே தவிர, சிங்­கள பௌத்­த­ர்­க­ளுக்கு எதி­ராக கருத்து வெளி­யி­ட­வில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்­பா­ணத்தில் நேற்று இடம்­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை சேர்ந்த தமி­ழர்கள் பெருந்­தி­ர­ளானோர் இணைந்து எழுக தமிழ் பேர­ணி­யினை நடாத்­தி­யி­ருந்­தார்கள். இதற்கு அனைத்து வகை­யிலும் ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­த­வர்­க­ளுக்கு நன்­றி­யினை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.
இந்­நி­லையில் தற்­போது இப் பேரணி தொடர்­பாக தெற்­கிலே இன­வாத ரீதி­யி­லான கருத்­துக்­களை அம் மக்­க­ளி­டையே சிலர் பரப்பி வரு­கின்­றார்கள். நாம் இப் பேர­ணி­யி­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்கு இது­வரை தீர்க்­கப்­ப­டா­துள்ள காணி விடு­விப்பு, அர­சியல் கைதி­களின் விடு­தலை, வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்­சி­முறை என்­பன இடம் பெற­வேண்­டு­மெ­னவும் சிங்­கள மக்­களே இல்­லாத இடங்­களில் திட்­ட­மிட்டு அமைக்­கப்­ப­டு­கின்ற பௌத்த விகா­ரைகள், திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள் போன்­றவை தடுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பவை தொடர்­பா­கவே வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம்.
இவ்­வா­றான விட­யங்­களை நாம் வலி­யு­றுத்­தி­ய­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய உரி­மைகள் என்­ப­த­னா­லே­யே­யாகும். இத்­த­கைய நிலையில் இவற்றை நாம் கோரு­வதை இன­வாதம் என கூறி­விட முடி­யாது. குறிப்­பாக இவ்­வா­றான எமது உரி­மை­களை நாம் கேட்­பது இன­வாதம் எனக் கூறு­ப­வர்­களின் நட­வ­டிக்­கை­யா­னது மட்­ட­மான அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.
இத­னை­விட முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் ரவூப் ஹகீம், வடக்­கிலே இன­வா­திகள் உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள நிலையில் அவ் இன­வா­திகள் யார் என அவர் கூற­வேண்டும்.
அத்­துடன் எழுக தமிழ் பேர­ணியில் நாம் வலி­யு­றுத்­திய தமிழ் மக்­க­ளு­டைய தீர்க்­கப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் தொடர்­பாக பேசி­ய­வர்கள் இன­வா­தி­க­ளாயின் இதே கொள்­கை­யு­டைய எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் உள்­ளிட்ட தமி­ழ­ரசு கட்­சியும் இன­வா­தி­களா என்­பதை கூற­வேண்டும்.
மு.கா.தலைவரின் கருத்து
இப் பேர­ணி­யிலே நாம் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக பேச­வில்லை. தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டிய உரி­மைகள் தொடர்­பா­கவே பேசி­யுள்ளோம். இவ்­வா­றான நிலையில் ஓர் சிறு­பான்மை தேசிய இன­மான தமி­ழர்கள், அவர்­க­ளது உரி­மை­களைக் கேட்­பது இன­வா­த­மாக பார்க்க முடி­யாது. அத்­துடன் மு.கா. தலைவர் ஹக்கீம் போன்­ற­வர்கள் அர்த்தம் புரி­யாது பேசு­கின்­றார்கள். இவர்கள் கடந்த அர­சாங்­கத்­திலே தமது இனத்­த­வர்கள் பாதிக்­கப்­படும் போது கூட அவர்­க­ளுக்­காக போரா­டா­த­வர்கள். தமது சுய­லாப அர­சி­யலை மாத்­திரம் தேடிக்­கொண்­டுள்­ளார்கள்.
மேலும் இவர்­க­ளது கருத்­துக்­க­ளுக்கு ஏற்றால் போலவே இங்­குள்ள சில தமிழ் ஊட­கங்­களும் இவற்றின் முழு­மை­யான இலாப நட்­டங்­களை முத­ல­மைச்­சரே ஏற்­க­வேண்டும் என்ற அடிப்­ப­டையில் எழுத விளை­வது தமிழ் மக்கள் தமக்­காக கோரு­கின்ற உரி­மை­களைக் கூட கொச்­சைப்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கின்­றது.
ரிஷாட்டின் கருத்து
மேலும் ரிசாட் பதி­யூதீன் வடக்கு கிழக்கு இணைப்பை ஒரு­போதும் முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள் என கூறி­யி­ருக்­கின்றார். இந்­நி­லையில் அவர் ஒன்றை விளங்­கி­கொள்ள வேண்டும், இந்­திய _ இலங்கை ஒப்­பந்தத்தின் பிர­காரம் வடக்கு கிழக்­கா­னது 18வரு­டங்­க­ளாக இணைந்தே இருந்­தது என்­ப­த­னை­யே­யாகும். அத்­துடன் இவ்­வாறு இணைந்­தி­ருந்­த­மைக்கு முஸ்லிம் மக்­களோ சிங்­கள மக்­களோ எதிர்த்­தி­ருக்­க­வில்லை. ஆனால் கடந்த மகிந்த ராஜ­பக்க்ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இது இணைக்­கப்­பட்ட வித­மா­னது தவ­றா­னது எனவும் அது ஓர் ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் மாத்­திரம் இணைக்­கப்­பட்­டி­ருந்­தது எனவும் பாரா­ளு­மன்ற சம்­ம­தத்­துடன் அச் செயற்­பாடு இடம்­பெ­ற­வில்லை என்றே கூறப்­பட்­டி­ருந்­தது. அந்த வகையில் நாம் தற்­போது கூறு­வது மீண்டும் பாரா­ளு­மன்­றி­னூ­டாக வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் என்­பதேயாகும்.
இதன் பின்னர் கிழக்­கிலே வாழ்­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் இருப்பின் அவர்­க­ளுடன் பேசி அவர்­க­ளுக்கு என்று தனி­யான ஓர் அல­க­மைப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்­கலாம். இத­னை­வி­டுத்து தேவை­யற்ற விதத்தில் வடக்கு கிழக்கி இணைக்­கப்­ப­ட­மு­டி­யாது என்­பது தொடர்­பாக பேசிக்­கொண்­டி­ருப்­பதை ஏற்­று­கொள்ள முடி­யாது. அத்­துடன் வடக்கு கிழக்­கா­னது இணைக்­கப்­ப­டாது விட்டால் தமி­ழர்­க­ளது மொழியும் நிலமும் காப்­பாற்­றப்­ப­டாது சென்­று­விடும். எனவே முஸ்லிம் மக்­க­ளுக்கு இது தொடர்­பி­லுள்ள பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்கு முஸ்லிம் தலை­மை­களே முன்­வ­ர­வேண்டும் என்றார்.
இதே­வேளை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கவும் அவ­ரினை கைது செய்­ய­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில கருத்துத் தெரி­வித்­தி­ருந்­தமை தொடர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­தனர்.
இதற்கு அவர் பதி­ல­ளித்­த­தா­வது,
உதய கம்­மன்­பில முட்­டாள்­த­ன­மா­கவும் அர்த்­த­மற்­ற­தா­கவும் பேசி­யுள்ளார். உண்­மையில் எழுக தமிழ் பேர­ணிக்கும் வடக்கு மாகாண சபைக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் காணப்­ப­டா­த­துடன் அதற்கு சொந்தமான எந்தவொரு வாகனமும் பிரச்சார தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை.
மேலும் இவர்களுக்கு சிங்கள மக்களிடையே இனவாத அடிப்படையிலான தவறான கருத்தை பரப்ப வேண்டிய தேவை உண்டு. அதனால் தான் இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள். இவர்கள் மாத்திரம் கண்டியில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பேசலாம். ஆனால் தமிழ் மக்கள் தமது உரிமைகளை கேட்பது அவர்களின் பார்வையில் இனவாதமாக சித்தரிக்கப்படுகின்றது.
நாம் தமிழர்களது ஜனாநயக ரீதியான உரிமைகளையே கோரினோமே தவிர சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது பௌத்தத்திற்கு எதிராகவோ செயற்படவில்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds