தேசிய அடை­யாள அட்டைக்கு புகைப்படம் எவ்வாறு எடுக்க வேண்டும்?

புதி­தாக தேசிய அடை­யாள அட்­டையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிக்கும் போது ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் பதிவு செய்­யப்­பட்ட புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து புகைப்­ப­டங்­களைப் பெறு­மாறு ஆட்­ப­திவு திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இம் மாதம் முதல் புதிய தேசிய அடை­யாள அட்­டைக்­காக, தேசிய சிவில் விமான ஒழுங்­க­மைப்பு தரத்­தி­லான புகைப்­படம் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது.

அதற்­க­மைய, புதிய இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைக்­கான உரிய புகைப்­படம் எடுத்தல் தொடர்­பாக தகை­மை­யு­டைய புகைப்­பட நிலை­யங்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

2017/09/01 ஆம் திக­தி­யி­லி­ருந்து தங்­களால் தேசிய அடை­யாள அட்­டையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிக்கும் போது கீழ்க்­காணும் தரத்­தி­லான புகைப்­ப­டத்­தினை உப­யோ­கப்­ப­டுத்­தும்­படி கோரப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான புகைப்­ப­டத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் பதிவு செய்­யப்­பட்ட புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ள­ரிடம் செல்­லும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

9,16 மற்றும் 17 என்னும் பிரி­வு­களின் நோக்­கங்­க­ளுக்­காகச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்குத் தேவைப்­ப­டுத்­தப்­படும் அத்­த­கைய ஒவ்­வொரு நிழற்­ப­டமும் பின்­வரும் பரி­மா­ணங்­க­ளையும், அள­வுக்­கு­றிப்­பீ­டு­க­ளையும், நிய­மங்­க­ளையும் மற்றும் தரத்­தையும் கொண்­டி­ருத்தல் வேண்டும்.

நிழற்­பட அள­வா­னது, அக­லத்தில் 35 மி.மீ. உய­ரத்தில் 45 மி.மீ. என்­ப­தா­க­வி­ருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், நிழற்­ப­டத்தின் தர­மா­னது, ஆட்­களைப் பதிவு செய்தல் ஆணை­யாளர் தலை­மை­ய­தி­ப­தி­யினால் ஏற்­பாடு செய்­யப்­படும் மென்­பொ­ரு­ளுக்­கி­ணங்க அல்­லது அறி­வு­றுத்­தல்­க­ளுக்­கி­ணங்க இருத்தல் வேண்டும்.

முக­மா­னது, திறந்த மற்றும் தெளி­வாகத் தென்­ப­டக்­கூ­டிய கண்­க­ளு­டனும், மூடிய வாயு­டனும், சிரிப்­பில்­லா­மலும், சுய­நிலை முகக் குறிப்­புடன் இருத்தல் வேண்டும்.

தலை­மு­டி­யா­னது, முகத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், முகத்தின் விளிம்­புகள் தெளி­வாகத் தென்­ப­டக்­கூ­டி­ய­ன­வா­க­வி­ருத்­தலும் வேண்டும்.

மூக்குக் கண்­ணா­டி­க­ளி­லி­ருந்து (ஏற்­பு­டை­ய­தாயின்) பிர­தி­ப­லிப்­புகள் எவையும் தென்­ப­டக்­கூ­டி­ய­ன­வா­க­வி­ருத்­த­லா­காது.

வில்­லை­க­ளி­னூ­டாகக் கண்கள் தெளி­வாகத் தென்­ப­டக்­கூ­டி­ய­ன­வாக இருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், தெளி­வான (நிறப்­பூச்­சி­டப்­ப­டாத) வில்­லைகள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன.

வெளிச்­ச­மி­டுகை ஒரு சீரா­ன­தாக இருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், நிழல்­களை, கூசொ­ளியை அல்­லது பளிச்­சிட்டுப் பிர­தி­ப­லிப்­பு­களைக் காண்­பித்­த­லு­மா­காது.

நிழற்­ப­டத்தின் காட்­சிப்­ப­டுத்­தலும் வெண்­நிறப் பின்­பு­லமும் விண்­ணப்­ப­கா­ரரின் இயற்­கை­யான தோல் நிறத்தைப் பிர­தி­ப­லித்தல் வேண்டும்.

தோற்­ற­நிலை நேரா­க­வி­ருத்தல் வேண்­டு­மென்­ப­துடன், முகமும் தோள்­களும் நிழற்­படக் கரு­விக்கு நடு­விலும் எல்லாப் புறமும் சரி­ச­ம­மா­கவும் இருத்­தலும் வேண்டும். பின்­ன­ணி­யா­னது, ஒரு சீரா­கவும் அலங்­கா­ரங்­க­ளின்­றியும் வடிவங்களில்லாமலும் இளநீல நிறத்திலும் இருத்தல் வேண்டும்.

உருவமானது, தெளிவாகவும் கூர்மையாகவும் ஒரு நிலைப்படுத் தப்பட்டதாகவும் இருத்தல் வேண் டும்.

நிழற்படமானது, உயர்தொழில்சார் அச்சிடும் ஆய்வுகூடத்தைப் பயன்படுத்தி நிறத்தில் அச்சிடப்படுதல் வேண்டும். எவ்வகையிலும் மாற் றப்படுத்தலாகாதென்பதுடன், விண் ணப்பகாரரின் இயற்கை நிலையில் எடுக்கப்படுதலும் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com