தேசத்தின் குரலின் 11 ஆவது ஆண்டு வணக்க நாள்

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழர் தேசம் எங்கும் இன்று நினைவுகூரப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி தேசத்தின் குரலாக தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு வரலாறானார்.
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தாய் மண்ணின் விடியலில் நாளும் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com