சற்று முன்
Home / உலகம் / தெஹ்ரான் மருத்துவமனையில் தீ விபத்து – 19 பேர் உயிரிழப்பு

தெஹ்ரான் மருத்துவமனையில் தீ விபத்து – 19 பேர் உயிரிழப்பு

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் ஒக்சிஜன் சேமித்து வைக்கும் பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் பரவியுள்ள தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com