தெஹிவளை வீட்டிலிருந்து நான்கு சடலங்கள் மீட்பு

கொழும்பு தெஹிவளை கவுடானை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மூன்று மாடிகள் கொண்ட வீட்டில் கீழ் மாடியில் இந்த சடலங்கள் காணப் பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு வர்த்தகர், அவரது மனைவி, அவரது மகள் மற்றும் உறவினர் ஒருவரின் மகள் ஆகியோரின் சடலங்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மின்சாரக் கசிவு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாமென்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட வீட்டின் சுவர்களில் இருந்த சில கைவிரல் அடையாளங்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com