தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தெல்லிப்பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா , அங்கஜன் இராமநாதன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகன் ஆகியோரின் இணைத்தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்  கூட்டத்தில் மீள் குடியேற்றம் , விவசாயம் , சுகாதாரம் நீர் விநியோகம் , கல்வி , மின் விநியோகம் ,உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் பா.கஜதீபன் , உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com