சற்று முன்
Home / செய்திகள் / தெற்கிற்கு வாலாட்டிவிட்டு வடக்கைப் பார்த்துக் குரைக்கிறார் வியாழேந்திரன்

தெற்கிற்கு வாலாட்டிவிட்டு வடக்கைப் பார்த்துக் குரைக்கிறார் வியாழேந்திரன்

அம்பாந்தோட்டையிலிருந்தும் குருநாகலிலிருந்தும் வருகின்ற உத்தரவுகளை தலைமேல் வைத்து அமுல்படுத்த முடிகின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினை சார்ந்தவர்களிற்கும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவருமான வியாழேந்திரன் போன்றோருக்கு வடக்கு எமது சகோதரர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதில் என்ன கஸ்டமிருக்கின்றதென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு அமைப்பாளர் சுரேஸ்.

வடக்கு தீர்மானங்களை கிழக்கில் அமுல்படுத்த முற்படவேண்டாமென கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்து மீண்டும் வடகிழக்கு தமிழ் உறவுகளிடையே நிலவிவரும் நல்லுறவை சிதைக்க வைக்கும் சதியென பலதரப்புக்களும் காட்டமான கருத்துக்களினை முன்வைத்துவருகின்றன.

முன்னர் விடுதலைப்போராட்டத்தை பிரதேசவாதத்தை கையிலெடுத்து கருணா சீரழித்தார். அதனால் இன்று வரை ஆயிரக்கணக்கான போராளிகள் நட்டாற்றில் விடப்பட்டு அநாதரவாக வாழ்ந்துவருகின்றனர். அவரோ இலங்கை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இப்பொழுதிருக்கின்றார்.

கருணாவை தொடர்ந்து தற்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கிழக்கில் பிரதேசவாதத்தை கையிலெடுத்திருக்கின்றாரென முன்னாள் போராளியான பாரதிகண்ணன் (47வயது) தெரிவித்தார்.

இலங்கை அரசின் இரண்டு கோடி பெற்றதில் இருந்து வியாழேந்திரன் செய்கின்ற போலி அரசியல் தமிழ் மக்கள் எவரிற்கும் தெரியதாதொன்றல்ல.
அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாமனிதர் தராகி சிவராம் நினைவேந்தலினை நடத்திய கும்பலொன்றிற்கு நிதி உதவியை அவர் வழங்கியிருந்தார்.

மாமனிதர் தராகி சிவராமை கொலை செய்த புளொட் அமைப்பின்; பிரதிநிதியாக மட்டக்களப்பில் இந்த வியாழேந்திரன் இருந்துவருகின்றார்.
அப்போது அவர் தான் அவ்வமைப்பிலோ அரசியலிலோ இல்லையென வாதிட்டாலும் அவர் சார்;ந்துள்ள குறித்த அமைப்பின் நிலைப்பாட்டையே ஊடகங்கள் விமர்ச்சித்துவருகின்றன.

இந்நிலையில் மாமனிதர் தராகி சிவராமை கொன்றவர்களது கட்சி பிரதிநிதியிடமிருந்து பணம் பெற்று நினைவேந்தல் செய்ய முற்பட்ட கும்பலை வடக்கிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று அம்பலப்படுத்தியிருந்தது.

இதனால் தனது போலி முகம் அகப்பட்டு அவர் கோபமடைந்து பிரதேசவாதத்தை கையிலெடுத்திருக்கின்றாராவென ஊடகவியலாளர் செல்வகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.உண்மையில் அவர் நடத்துகின்ற அரசியல் கூத்து அவரது சில அல்லக்கைகளிற்கு கீரோயிசமாக இருக்கலாம்.தியாகங்களையும் மரணங்களையும், இரத்தசிந்தல்களுடனும் வாழ்வை கடந்து வாழும் வடக்கு ஊடகத்துறைக்கு இவர் ஒரு செல்லாக்காசு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com