தெருவிலேயே உணவு சமைத்து இரவு பகலாக தொடரும் வடக்கு பட்டதாரிகள் போராட்டம்

2012 ஆம் ஆண்டு பங்குனிக்குப் பின் வடக்கு மாகாண பட்டதாரிகளிற்கான அரச நியமனங்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில் 2015 ஆம் ஆண்டு வடக்கு மாகாணப் பட்டதாரிகளால் இரவுபகல் போராட்டம் நடாத்தப்பட்டபோது வடக்கு மாகாண அமைச்சர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் அவர்களின் போராட்டம் இடைநிறுத்தப்பட்டடிருந்தது. எனினும் உறுதிமொழிகளிற்கு அமைவாக பட்டதாரிகளிற்கான நியமனங்களை வழங்காது மாகாண மற்றும் மத்திய அரசுகள் காலத்தை இழுத்தடித்து ஏமாற்வந்த நிலையில் நேற்றையதினம் (27) காலை முதல் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக காலவரையறையற்ற கவனஈர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் வடக்கு மாகாண பட்டதாரிகளின் இன்று (28) இரண்டாவது நாளைகவும் தமது போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

தமக்கான உணவுகளை வீதியோரத்திலேயே தாங்கள் தயாரித்து இரவுபகல் போராட்டமாக இப் பட்டதாரிகள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் ஊடகங்கள் வாயிலாக தாம்மால் பகிரங்கப்படுத்தப்ட்ட தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை  நளையதினம் (01) ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டடிருப்பதாகவும் கவனயீர்பின் வடிவங்களை தினமும் பல்வேறு வகைகளில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com