தென் ஆபி­ரிக்க விடு­தலை போராட்­டத்தின் செயற்பாட்டாளர் இலங்கை விஜயம்!

தென் ஆபி­ரிக்க விடு­தலைப் போராட்­டத் தின் செயற்­பாட்­டாளர், வண­பிதா, மைக் கல் லெப்ஸ்லி இலங்­கையில் மலை­யக மக்­க­ளுடன் தனது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்­காக அட்டன் பிர­தே­சத்­துக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை(9) காலை 10.00 மணி­முதல் பகல் 1.00 மணி­வரை 88/2 டன்பார் வீதி, அட்­டனில் அமைந்­துள்ள CWF மண்­ட­பத்தில் இந் நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

மைக்கல் லெப்ஸ்லி நியூசி­லாந்து நாட்டை சேர்ந்­தவர். தனது இறை­ப­ணியின் மேல­திக கற்­கைக்­காக தென்­னா­பி­ரிக்கா நாட்­டுக்கு அனுப்பப்­பட்டார். அக் காலத்தில் தென்­னா­பி­ரிக்­காவில் நிற­பேத கொடூ­ரத்­துக்கு எதி­ரா­கவும் ஒடுக்­கப்­பட்ட கறுப்­பின மக்­க­ளுக்­கா­கவும் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை வழங்­கி­யவர்.

நிற­பே­தத்­துக்கு எதி­ராக செயற்­பட்­ட தால், வெள்ளை நிற ஆட்­சி­யா­ளர்­களால் அவரை கொல்­வ­தற்­காக பார்சல் குண்டு அனுப்­பப்­பட்­டது. இந்த பார்சல் குண்டு வெடிப்பில் இவர் உயிர் தப்­பி­னாலும் அவரின் இரண்டு கைகளையும் ஒரு கண்ணையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com