தென்பகுதியின் ஏழு மாவட்டங்களிற்கு விசேட அறிவிப்பு

மழை பெய்யும் பட்சத்தில் கீழ்க்கண்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டட ஆய்வு அமைப்பு அறிவித்திருப்பதாக தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மழை ஓரளவு பெய்தாலும் இந்த மலைப் பகுதிகளில் மண்சரிவு உடனடியாக காணப்படுகின்ற அபாயம் உண்டு என்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி ஹெலபாத்த பெல்மதுல்ல, குறுவிற்ற , ஹெலியகொட, கிரிஎல்ல,இம்புல்பே, ஹயகம, காவத்தை, களவான, கொலன்ன, நிவித்திகலை ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

கேகாலை மாவட்டம்

புளுத்கோபிட்டி , தெரணியகலை, எட்டியாந்தோட்டை , தெய்யோவிற்ற ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

காலி மாவட்டம்

பத்தேகம, யக்கலமுல்ல, நெலுவ, தவளம, நியாகம, நாகொட ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

களுத்துறை மாவட்டம்

புளத்சிங்ஹள, அகலவத்தை, வளல்லாவிற்ட மற்றும் பதுரளிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

மாத்தறை மாவட்டம்

கொட்டப்பொல , பஸ்கொட , பிட்டபெத்தற, முளரியன ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

வலஸ்முல்ல , கட்டுவன ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

நுவரெலியா மாவட்டம்

அம்பகமுவ, கோரளைபிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com