தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்! நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் வெற்றி!

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியின் முக்கிய பதவிகளில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர். வெற்றி பெற்றுள்ளனர்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.  ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்
இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி
நாசர்: 1334
சரத்குமார்: 1231
 பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி
விஷால்: 1445
ராதாரவி:1038
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்
கார்த்தி – 1493
எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் -1080

துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 1362 வாக்குகளும் பொன்வண்ணன் 1235 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.


நாசர் வெற்றிக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
விஷால் அணியின் வெற்றியை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று ராதாரவி தேர்தல் முடிவு  குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com