சற்று முன்
Home / செய்திகள் / தூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா ? கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் !!

தூத்துக்குடி படுகொலை முன் திட்டமிடப்பட்டதா ? கொல்லப்பட்டவர்களில் 08 பேர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என தகவல் !!

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட 10 பேரில் 08 பேர் கடந்த 100 நாட்களாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்தவர்கள் எனும் அதிர்ச்சித் தகவலை தமிழக தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளனது.

குறித்த 10 பேரும் நெஞ்சுப் பகுதி மற்றும் தலைப்பகுதியிலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் முன் திட்டமிடப்பட்டே இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலும் குறி பார்த்துச் சுடும் சினைப்பர் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சிவில் உடை தரித்திருந்ததாகவும் தமிழக தெலைக்காட்சிகள் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளன.

100 நாள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த அரசு போராட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களை கொன்று மக்களை பயமுறுத்தி அடக்கமுயன்றிருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கலவரங்கள் ஏற்பட்டால் மேல் வெடி வைத்தல் அல்லது காலிற்கு கீழே தான் பொலிசார் சுடவேண்டும் என சட்ட விதிமுறைகள் கூறப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களை மட்டும் இலக்கு வைத்து அதுவும் நெஞ்சிலும் தலையிலும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிட்டது யார் என்பது தொடர்பிலும் குழப்பங்கள் நிலவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com