சற்று முன்
Home / செய்திகள் / தூக்குத் தண்டனைக்குத் தயாராகும் மைத்திரி

தூக்குத் தண்டனைக்குத் தயாராகும் மைத்திரி

போதைப்­பொ­ருள் கடத்­தல் கார­ண­மாக தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட் ­டுள்ள நிலை­யி­லும் போதைப்­பொ­ருள் கடத்­தல் நட­வ­டிக்­கை­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட கைதி­க­ளுக்கு தூக்­குத் தண்­டனை நிறை­வேற்ற வேண்­டும் என்று அண்­மை­யில் மேற்­கொண்ட தீர்­மா­னத்தை நாட்­டி­ன­தும் அடுத்த தலை­மு­றை­யி­ன­தும் எதிர்­கா­லத்­துக்­காக உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

போதைப் பொருள் கடத்­தல்­க­ளில் தொடர்­பு­பட்டு நீதி­மன்­ற­தால் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­க­ளில் அடைக்­கப்­பட்­டுள்ள சில கைதி­கள், சிறைச்­சா­லைக்­குள் இருந்­த­வாறு போதைப் ◌பொருள் கடத்­தல்­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்­குத் தூக்­குத் தண்­டனை நிறை­வேற்ற வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த மே மாதம் தெரி­வித்­தி­ருந்­தார். இது தொடர்­பில் வாதப் பிர­தி­வா­தங்­கள் எழுந்­தி­ருந்­தன. நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் மாற்­றத்­தால் அந்­தப் பேச்சு அடி­பட்­டுப் போயி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், போதைப்­பொ­ருள் கடத்­தலை ஒழித்­தல் மற்­றும் குற்­றங்­க­ளைக் குறைத்­தல் தொடர்­பான சட்­டத் திருத்­தங்­கள் பற்றி அரச தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது, மைத்­தி­ரி­பால தூக்­குத் தண்­டனை விவ­கா­ரம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

தூக்­குத் தண்­டனை வழங்­கப்­பட வேண்­டிய நபர்­கள் பற்­றிய அறிக்­கை­க­ளைச் சமர்ப்­பித்­தல் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­கள் உரிய முறை­யில் செயற்­ப­டாத கார­ணத்­தால் அந்­தத்­தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வது தாம­த­மா­கி­யுள்­ள­து­டன், அது பற்­றிய விசா­ர­ணை­யொன்றை மேற்­கொள்­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தா­க­வும் மைத்­திரி இதன்­போது குறிப்­பிட்­டுள்­ளார்.

போதைப்­பொ­ருள் கடத்­த­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான சட்­டங்­களை ஒரு­போ­தும் வலு­வி­ழக்க இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்­றும் போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­கள் தப்­பிச் செல்­வ­தற்கு முடி­யாத வகை­யில் அந்­தச் சட்­டங்­களை பலப்­ப­டுத்த வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் சுட்­டிக்­காட்­டிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, மது­வ­ரித் திணைக்­க­ளம் உள்­ளிட்ட அனைத்து நிறு­வ­ன­மும் இதன்­போது ஒத்­து­ழைப்­பு­டன் நாட்டு மக்­க­ளின் நன்­மைக்­காக தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் சுட்­டிக் காட்­டி­னார்.

போதைப் பொருள் ஒழிப்பு மற்­றும் குற்­றங்­களை குறைப்­ப­து­டன் தொடர்­பு­டைய சட்ட வரை­வு­கள், மது வரி கட்­ட­ளைச் சட்­டத்­தின் 46 மற்­றும் 47 ஆவது உறுப்­பு­ரை­கள் திருத்­தம், நச்சு போதைப் பொருள் கட்­ட­ளைச் சட்ட திருத்­தம், சிறைச்­சா­லை­கள் பாது­காப்­புக்கு சிறப்பு அதி­ர­டிப் படை­யின் உத­வியை பெற்­றுக்­கொள்­ளல், வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களை பூசா சிறைச்­சா­லைக்கு மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com