சற்று முன்
Home / செய்திகள் / துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களிற்கு அழைப்பு!

துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களிற்கு அழைப்பு!

புதிதாக கடலில் உருவாகக்ப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், சர்வதேச பாடசாலை மற்றும் மருத்துவமனை போன்றவற்றிற்கான மூலோபாய முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பட்டலி சம்பிக ரணவக்க சமர்ப்பித்த இந்த பத்திரத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தில் காணியை நிரப்பும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச பாடசாலை, மகாநாட்டு மண்டபம், கண்காட்சி மற்றும் மகாநாட்டு மத்திய நிலையம் மற்றும் சர்வதேச வைத்தியசாலைக்காக முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

முதலீட்டாளர்களின் விண்ணப்பங்ளை பெறுகை நடைமுறைக்கு அமைய, பரிசீலித்து முதலீட்டாளர்களை தேர்வு செய்யவும், அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் துறைமுக நகரத்தை, சீன துறைமுகம் மற்றும் பொறியியல் நிறுவனம் உருவவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com