சற்று முன்
Home / உள்ளூர் செய்திகள் / துர்முகி வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்

துர்முகி வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி  வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி  13 ஆம்  திகதி  இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய  காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம்  இலையும் வைத்து  மருத்து  நீர் தேய்த்து நீராட  வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

திருக்கணித  பஞ்சாங்கமோ 13 ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று  பிற்பகல்  3.48 மணி தொடக்கம் இரவு 11.48  மணிவரை புண்ணிய காலமாகும்.  சிரசுக்கு வேப்பம் இலையும்  காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்-வருஷமாகும்.

இந்த புத்தாண்டு 13.04.2016 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு 12.04.2016 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.IMG_0105 IMG_0107 IMG_0109 IMG_0110 IMG_0119

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழில் ஆசிரியர் அடித்ததால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

யாழ் பிரபல பாடசாலையில் ஆசிரியர் அறைந்ததால் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com