துரோகத் தலைமை அகற்றப்படும்வரை கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வாய்ப்பில்லை

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகமிழைத்துவருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள துரோகத் தலைமைகள் வெளியேற்றப்பட்டாலே தாம் அந்த அமைப்போடு இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இன்று (11) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

“எமக்கு வாக்களித்து மாற்றத்துக்காக ஆணையிட்ட மக்களுக்கும் எம்மோடு இணைந்து களமாடிய வேட்பாளர்களுக்கும். கடந்த எட்டு வருடங்களுக்குப் பின் எங்கள் தரப்பு நியாயங்களையும் உள்ளதை உள்ளபடி தெரிவிக்க சந்தர்ப்பமளித்து நடுநிலைத் தன்மையுடன் நடந்துகொண்ட ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எம்மைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் பெரியதொரு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. மக்கள் மாற்றம் ஒன்றினை விரும்புகின்றார்கள் என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியிருக்கின்றது.
இத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தன்மையே பெரும்பாலான சபைகளில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டும், ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு இணங்கியும், அதில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளின் தலமைகளும், ஒட்டுமொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமைகளுமாக உள்ளவர்களும், கூட்டமைப்பை விட்டு வெளியேறுகின்ற போதே நாம் கூட்டமைப்போடு சேர்ந்து பயணிப்பது தொடர்பில் பரிசீலிக்க முடியும்.

தமிழ் மக்கள் உறுதியாக தேசியத்தோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை 2009. மே மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இருந்த்து. ஆனால் அந்த நம்பிக்கைக்கு துரோகமிழைக்கின்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தையடுத்து அதனை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தினாலேயே நாம் 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்தோம்.

இவ்வாறான நிலையல் நாம் முன்வைத்த கருதத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான எரிச்சல் காரணமாகவோ, விரக்த்தியின் காரணமாகவோ அல்ல. அவை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கொள்கை ரீதியான விமர்சனங்களயாகும். இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்து ஒற்றையாட்சிக்கு இணங்கி, பௌத்திற்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வருகின்றார்கள் என்ற அடிப்படையின் காரணமாகவே நாம் முன்வைத்த கருத்துக்கள் கடுமையானதாக இருந்தது.

இதேநேரம் நாம் இன்னுமொரு விடயத்தையும் மிகத் தெளிவாக கூறிவந்துள்ளோம். அதாவது நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது அதன் பங்காளி கட்சிகளுக்கோ எதிராக செயற்படுகின்றவர்கள் அல்ல எனவும் அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்கின்ன துரோகங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துகின்றவர்களாகவே இருக்கின்றோம் என்பதையும் மிகத் தெளிவாக கூறி வந்துள்ளோம். இந்நிலையில் இன்று தமிழ் மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு அடிதளம் ஒன்றை போட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய பேரவையின் கொள்கையை, உண்மையில் அடிப்படை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக இருந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு நேர்மையான ஊழலற்ற, ஆட்சியை நடாத்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு நாம் ஒன்றாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.

ஆனால் அவ்வாறு நாம் இணைந்து செயற்பட வேண்டுமாயின் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமைகளும், அவர்களது தீர்மானங்கள் எல்லாவற்றிற்கும் ஆமோதித்து ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலமைகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டாலே நாம் கூட்டமைப்போடு இணைந்து செயற்பட தாயார். அதுவரை கூட்டமைப்போடு ஒருமித்து பயணிக்க முடியாது.

இதேவேளை இவ் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் துய்மையான அரசியலை உருவாக்க தயாராகவுள்ளவர்கள் எம்மோடு இணைந்து தமிழ் தேசிய பேரவையின் தரப்பாக செயற்பட தயாராக இருந்தால் அவர்களை அரவனைக்க தாம் தயாராகவே இருப்பதாகின்றோம்.

அதேநேரம் கூட்டமைப்பின் கொள்ளைகளை விடவும் மிக மோசமான கொள்கைளை உடைய ஏனைய எந்த கட்சிகளுடனும் குறிப்பாக அது ஈ.பி.டி.பி கட்சியாக இருந்தாலும் நாம் அவர்களோடு சேர்ந்து செயற்பட போவதில்லை. ஆனால் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையும் ஒன்றாகவே உள்ள நிலையில் ஈ.பி.டி.பி அதனை பகிரங்கமாக கூறுகின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக அதனை கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com