துரையப்பா விளையாட்டரங்கைத் திறக்கிறார் மோடி ! – ஜனாதிபதி மைத்திரி பங்கேற்பு

Modai & Maithreeயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டரங்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்வரும் 18 ஆம் திகதி நேரடி காணொளி ஊடாக (வீடியோ கான்பரன்ஸ்) திறந்து வைக்க உள்ளார் என நியூ இந்தியன் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக பங்கேற்கிறார். இதன்போது பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தே நேரடி காணொளி தொடர்பாடல் முறை மூலமாக (வீடியோ கான்பரன்ஸ்) இந்நிகழ்வில் பங்கேற்கிறார்.

யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது துரையப்பா விளையாட்டரங்கம். இந்த விளையாட்டரங்கத்தை புனரமைக்க இந்தியா நிதி உதவி செய்துள்ளது. அவ்வகையில் இலங்கை ரூபாவில் சுமார் 145 மில்லியன் ரூபாவினை இந்திய அரசாங்கம் இதற்கென வழங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவ்விளையாட்டரங்கம் புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த விளையாட்டரங்கத் திறப்பு விழா எதிர்வரும் 18 ஆம்திகதி நடைபெற உள்ளது.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் துரையப்பா விளையாட்டரங்கில் தேசிய விளையாட்டு விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். புனரமைப்பு பணிகளுடன் இணைந்ததாக மேலும் இரண்டு பிரதான மற்றும் இரண்டாந்தர கூடாரங்கள், ஜிம்னாசியத்துக்கான அரங்கம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com