சற்று முன்
Home / செய்திகள் / துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய குழந்தையின் படம்: அகதிகளின் நிலையை உலகுக்கு உணர்த்துமா ?

துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய குழந்தையின் படம்: அகதிகளின் நிலையை உலகுக்கு உணர்த்துமா ?

துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள 3 வயது குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா,சிரியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக, அங்குள்ள மக்கள் ஆபத்தான கடற்பயணங்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகிறார்கள்.
அகதிகளை சட்ட விரோதமாக அழைத்துச் செல்லும் படகு உரிமையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு அகதிகளை ஏற்றிக் கொண்டு மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல முற்படும்போது பல சமயங்களில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது.
இவ்வாறான விபத்துக்கள் மூலம் இந்த ஆண்டு மட்டும் 2500 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில்,சிரியாவில் இருந்து கிரீஸ் நாட்டிக்கு பயணம் செய்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த படகில் இருந்த 12 பேர் உரிழந்தனர். படகில் இருந்த 3 வயது குழந்தையும் உயிரிழந்து, கரைஒதுங்கிஉள்ளது. குழந்தையின் பெயர் அய்லான் குர்தி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com