துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு சதி பொதுமக்களால் முறியடிப்பு – 200 பேர்வரை பலி – 3000 இராணுவத்தினர் கைது

160716124706_turkey_day_after_coup_05_976x782_epa_nocreditதுருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், பெரும்பான்மையானவர்கள் பொதுமக்கள்.

துருக்கி ராணுவத்தை சேர்ந்த 3,000 உறுப்பினர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர், துருக்கி ராணுவத்திற்கு சொந்தமான டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை அரசுக்கு எதிராக அவர்கள் கைப்பற்றி இருந்தார்கள்.

இரவு முழுக்க இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில், துப்பாக்கிச்சூடு மற்றும் கனரக வெடிப்புகள் ஏற்படுத்திய சத்தங்கள் எதிரொலித்து கொண்டிருந்தன.160716125946_turkey_day_after_coup_07_640x360_getty_nocredit

இந்நிலையில் துருக்கி அதிபர் எர்துவன், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வீதிக்கு வந்து போராடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பெரும் திரளான மக்கள் கூடி  ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடித்தனர்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில், துருக்கியில் மீண்டும் புதிய புரட்சிகள் வெடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் வீதிகளிலேயே விழிப்புடன் இருக்கும்படி தெரிவித்துள்ள துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி உரையொன்றில் இந்த முயற்சியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவம் சுத்தபடுத்தப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
29 கர்ணல் மற்றும் 5 தளபதிகள் இதுவரை துருக்கி ராணுவத்தில் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாோஸ்போரஸ் நீரிணை மீதுள்ள பாலத்தில் நிலை கொண்டிருக்கும் கவச டாங்கிகளை விட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட படையினர் கையை மேலே தூக்கியபடி சரணடைய வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒன்று காட்டியது.

t1 t3

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com