துருக்கியில் ரஷ்யாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது(வீடியோ)

சிரியாவின் எல்லையான துருக்கியில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் போர் விமானம், ரஷ்யாவின் சு-24 வகை விமானம் என்று மாஸ்கோ செய்திக் குறிப்பு  உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக,துருக்கி அரசு சார்பில், ” ரஷ்ய விமானம் துருக்கி எல்லைப் பகுதியில் வன்முறை செயல்களில் ஈடுபட முயன்றதாக வந்த செய்தியை அடுத்து, அதை நாங்கள் சுட்டுவீழ்த்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   
ஆனால் ரஷ்ய ராணுவத் தரப்பில்,துருக்கி வான் பகுதியில் நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை  என்று மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com