துருக்கியின் இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி பதற்றம் நீடிப்பு

துருக்கி நாட்டின்  இஸ்தான்புல்லில் குண்டுவெடித்து 10 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் நீடிக்கிறது.
 
இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புப்படை வாகனங்கள் அங்கு விரைந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏராளமான உடல்கள் ரத்தவெள்ளத்தில் சிதறிக்கிடப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவரால் நிகழ்த்தப்பட்டது என்றும்,எந்த தீவிரவாத இயக்கமும் இந்தத் தாக்குதலுக்கு  பொறுப்பேற்கவில்லை என்றும் துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதனால் துருக்கி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds