துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யச் சென்றவர்களுடன் இராணுவம் முரண்பாடு!

கிளிநொச்சி – விஸ்வமடு பிரதேசத்தில் மாவீரர் துயிலும் இல்லம் உள்ள பகுதியை சுத்தம் செய்யச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுடன் அங்கிருந்த இராணுவத்தினர் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இந்தப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒன்றாகும்.

இந்தநிலையில், எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, குறித்த பகுதியில் சிரமதானம் செய்யச் சென்ற தமக்கு, இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்தனர் என, மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, வட மாகாண சபை உறுப்பினர்களான, டி.குருகுலராஜா மற்றும் எஸ்.பசுபதிப்பிள்ளை ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அப் பகுதிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com