சற்று முன்
Home / செய்திகள் / துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐதேக உறுப்பினர் மரணம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐதேக உறுப்பினர் மரணம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் பிரதேச சபை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கரப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

யார் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்கள் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com