துப்பாக்கிச் சூட்டிலேயே யாழ். பல்கலை மாணவர்கள் பலி – பொலிசாரே சுட்டுக்கொன்றனரா – 5 பொலிசார் கைது

aj23990-kan-banner
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில்  யாழ் பல்கலைக்கழக மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த மாணவன் மீது துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ததாகவும் அதன் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதுண்டதால் பின்னால் இருந்துவந்த மாணவன் விபத்திற்குள்ளாகி மரணமடைந்நதாக வைத்தியசாலை மருத்துவ அறிக்கைள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிசார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பொலிசார் ( சி.ஐ.டி) விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் அரசின் தகவல் திணைக்களம் அறிக்கைவெளியிட்டுள்ளது.

img_5192
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அரசறிவியல் பீட மாணவன் நடராஜா கஜன் (23), ஊடகக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த மாணவன் பவுண்ராஜ் சுலக்ஷன் (24) ஆகிய இருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

பொலிஸ் தரப்பு விபத்து என மூடிமறைப்பு – தடையங்களை அழித்ததா ?
விபத்து காரணமாகவே மரணம் ஏற்பட்டதாகக் பொலிஸ் தரப்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டதோடு சம்பவ இடத்திற்குச் சென்று புகைப்படம் எடுக்க முனைந்த ஊடகவியலாளர்களையும் பொலிசார் கடுமையான விசாரணைகளின் பின்பே படம் எடுக்க அனுமத்திருந்தனர். இன்று (21) மரணம் தொடர்பில் சந்தேகங்கள் வலுப்பெற வைத்தியசாலையிலும் பொலிஸ் நிலையத்திலும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக குவியத்தொடங்கினர். நிலைமைய உணர்ந்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஐந்து பொலிசாரினைக் கைதுசெய்துள்ளதாக அறிவித்ததோடு இத்தகவலை உடனடியாகவே அரசின் தகவல் திணைக்களத்தின் இணையத்தில் ஊடக அறிக்கையாகவும் வெளியிட்டனர்

SAMSUNG CAMERA PICTURES

இதேவேளை காலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.

இதேவேளை மதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.
சம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.SAMSUNG CAMERA PICTURES

 

வெடிசத்தம் கேட்டது பின்னாலேயை பொலிசார் நடந்து வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ளகடை ஒன்றில் பணியாற்றும் காவலாளி ஒருவர் தெரிவிக்கையில் ,  நேற்று நள்ளிரவு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார். விபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர் நான் பயத்தில் கடையினுள் சென்றுவிட்டேன் என்றார்.SAMSUNG CAMERA PICTURES

இதேவேளை மற்றொருவர் குறிப்பிடுகையில் நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன் என்றார்.

விசேட பொலிஸ் அணி சம்பவ இடத்தில் கடமையில் இருந்ததா…?
யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக களமிறக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் அணியொன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற இடத்தில் கடமையில் இருந்ததாகவும், அந்நேரம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி செய்த சைகையை மீறிச் சென்றபோது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால் தடம் மாறிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமைக்கு மாறாக சம்பவ இடத்தில் பொலிசார் குவிப்பு.
இரவோடு இரவாகவே சம்பவ இடத்தில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டனர் குளப்பிட்டிச் சந்தியிலிருந்து மக்கள் வங்கிவரை சுமார் ஐம்பது மீற்றர் நீளத்திற்கு குற்றப் பிரதேசம் என லேபிள்கள் இடப்பட்டன. பொலிசார் இரவிரவாகவே அங்கு தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
CCTV கமராவில் பதிவான காட்சி.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

நீதிபதி மாணவர்களை அழைத்து பேச்சு

நிலைமகளை உணர்ந்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி மாலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரை அழைத்து வன்முறைகளில் ஈடுபட வேண்டாம். என கூறியிருந்தார்.

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நீதிபதி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உ.மயூரன் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டனர்.14650453_1500958089920847_1735783872467231796_n-1

தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது “வன்முறைகளில் ஈடுபட வேண்டாம், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளது, மற்றய மாணவன் விபத்திலேயே உயிரிழந்துள்ளார், உடலை எரிக்க வேண்டாம், புதைக்கும் படியும் விசாரணைகள் விரைந்து எடுக்கப்படும்” எனவும் நீதிபதி கூறியதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இரவு 8 மணிவரை மாணவர்களது உடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படாத நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பெருமளவில் மாணவர்கள் திரண்டிருந்ததை காணமுடிந்தது.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES
14657493_1500958119920844_6007966073297274338_n 14717039_1210423789014075_673786957323727004_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com