சற்று முன்
Home / செய்திகள் / துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் – பாஜக எச் ராஜாவின் ருவிற்றால் பரபரப்பு

துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் – பாஜக எச் ராஜாவின் ருவிற்றால் பரபரப்பு

தூத்துக்குடிச் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் சரிதான் என்கிற ரீதியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை என அவர் அனது ருவிற்றரில் தெரிவித்துள்ளார். எச் ராஜாவின் இந்த ருவிட்டர் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். துப்பாக்கிச்சூடு இருப்பினும் போராட்டம் கட்டுக்கடங்காமல் போனது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டம் கைமீறியதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தமிழகம் முழுவதும் அதிர்ச்சி இதில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com