துன்னாலை சுற்றிவளைப்பு! : STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!! – மூவர் கைது ! – வாகனங்கள் பறிமுதல் !!

பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து துன்னாலைப் பகுதியை முழுமையாகச் சுற்றிவளைத்து வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இந்நிலையில் இச் சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட மோலும் சில வாகனங்களையும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com