சற்று முன்
Home / செய்திகள் / தீலிபனின் நினைவேந்தலை மாநகர சபையே செய்யும் -ஆர்னோல்ட்

தீலிபனின் நினைவேந்தலை மாநகர சபையே செய்யும் -ஆர்னோல்ட்

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெறுமென மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னெல்ட் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் இறுதி நாள் நிகழ்வு நல்லூரில் தியாகி திலீபன் அவர்கள் இத் தேசத்திற்காகவும்இ எமது மக்களுக்காகவும் அஹிம்சை வழியில் போராடி தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய இடத்தில் அக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அங்கிருந்து தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் இன்னுயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.

எனவே அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே (காலை 10.15 மணியளவில்) ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வின் பொதுச் சுடரினை எமது மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் பெற்றோரகளில் ஒருவர் ஏற்றிவைப்பார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தமது மலரஞ்சலிகளை செலுத்துவர்.

இவ்வாறு இந் நினைவு நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக நடைபெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எமது மக்களின் உணர்வுகளையும் எமது மக்களின் தேவைகளையும் நன்குணர்ந்து செயற்படத் திடசங்கட்பம் பூண்டுள்ள நாம் அனைவரும் இந் நிகழ்வை உணர்வுபூர்வமாக அனுஷடிக்க ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவே மேற்படி உணர்வுபூர்வமான இறுதி நினைவு நாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள்இ சிவில் சமூகப்பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்போமாக என பகிரங்க அழைப்பு விடுகின்றேன்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com