தீர்வுத்திட்ட வரைபு முதல் அறிக்கை ஜனவரி இறுதிக்குள் வெளியீடு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்ட வரைபு தொடர்பான முதல் அறிக்கை ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் முன் வெளியிடப்படும் என ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் முன்றாவது கூட்டம் இன்றையதினம் (02.01.2016) யாழ் பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது அதன்பின்னர் ஊடகவியலாளர்களிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அவர் மேலம் தெரிவிக்கையில்,
வரைபு தயாரிக்கும் பணி தொடர்பாக நாம் தொடர்ச்சியாக கலந்து பேசிக்கொண்டிருக்கப்போகின்றோம். முதல் அறிக்கை முடிவடைந்ததும் அவ மக்களிடமும் ஊடகவியலாளர்களிடமும்  ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படும். 
 பின்னர் மக்களிடமிருந்தான கருத்துக்கள் சேர்க்கப்பட்டு இறுதி வரைவு தாயரிக்கப்பட்டு பங்குனி மாத இறுதிப்பகுதிக்குள் இறுதி வரைபு தயாரிக்கப்பட்டுவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தீர்வு தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகளைத் தெரிவிப்பதற்காக மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல எழுத்தூபூர்வமாக தருபவர்களிற்காக அஞ்சல் முகவரி ஒன்றினையும் வழங்கவுள்ளோம். மக்கள் மற்றும் புலமையாளர்கள் தங்கள் ஆலோசனைகளை அவற்றிற்கு அனுப்பிவைக்க முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com