தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு இருந்துவிடுவதால் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க முடியாது – எதிர்க்கட்சித்தலைவர்

(22.09.2015) மாகாணசபையில் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தால் பட்டதாரிகளிற்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்துவிட முடியாது வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து அமைச்சரவையில் அது தொடர்பில் கதைக்க வேண்டும்.  அதற்கு அமைச்சரவைக்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும். என வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (22) வடக்கு மாகாண பட்டதாரிகள் மாகாண சபையின் முன் தமக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
இதுதொடர்பில் சபையில் விசேட பிரரணை ஒன்று முன்மொழியப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவித்ததாவது,
 

வேலை வாய்ப்புக்களை அரச திணைக்களம் தான் வழங்க வேண்டும் என்று இல்லை தற்போது வடக்கில் உள்கட்டுமான வசதிகள் தாராளமாக இருக்கிறது. அதனால் முதலீட்டளர்களை வடக்குக்கு வருவதை ஊக்கிவித்து வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளலாம்.
 
எம்மவர்கள் பலர் புலம் பெயர் நாடுகளில் வசதிகள் உடன் வாழ்கின்றார்கள். அவர்கள் இங்கு முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். 
 
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றோம் என கூறியும், பினாமிகள் சிலரும் புலம்பெயர் மக்களை ஏமாற்றியுள்ளனர். இதனால் இங்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு பயப்படுகின்றார்கள்.
 
முதலமைச்சர் மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால் முதலமைச்சர் கேட்டுகொண்டால் பல முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றார்கள்.
 
வடக்கில் தனியே பட்டதாரிகள் மாத்திரம் வேலை வாய்ப்பு இன்றி இருக்கவில்லை. உயர்தரம் மற்றும் சாதாரண தர கல்வி தகமையுடன் பல இளைஞர்கள் யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி காணப்படுகின்றார்கள்.
 
அனைவருக்குமான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும் ஆயின் வடக்குக்கு முதலீட்டாளர்களின் வருகை அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds