தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை: ரஞ்சித் மறுப்பு

ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு நாயகியாக தீபிகா படுகோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியான தகவல்களை ரஞ்சித் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ரஞ்சித் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரஜினி. இப்படத்தின் நாயகிக்கு முதலில் வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

சமீபத்தில் மும்பையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்கு வித்யாபாலன் வந்த போது ரஜினி – ரஞ்சித் படம் குறித்த கேள்விக்கு “இன்னும் சில நாட்களில் தெரியும்” என்று மட்டும் பதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தீபிகா படுகோனிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி – தீபிகா படுகோன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் ரஜினி – தீபிகா ஜோடியில் படம் அமையும் என் பேசப்பட்ட சூழலில், ரஞ்சித் இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com