சற்று முன்
Home / செய்திகள் / தீடிரென தீப்பற்றிய முச்சக்கரவண்டியால் பரபரப்பு !

தீடிரென தீப்பற்றிய முச்சக்கரவண்டியால் பரபரப்பு !

கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் 16.05.2018 அன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து அட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடிக்க ஓட்டுனரும், பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் அணைவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

இந்த முச்சக்கரவண்டியை பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com